1441 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்…!!!

முகக்கவசங்கள் இல்லாமல் பொது இடங்களில் நடமாடிய மேலும் 1441 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.