உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ரொறன்ரோ கட்டாயம்


ரொறன்ரோவில் கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்காக, உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த துணைச் சட்டம் எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலையதிர் கால முதல் நகர சபைக் கூட்டம் வரை இது நடைமுறையில் இருக்கும். இது தற்போது ஒக்டோபர் 1ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், முகக்கவசம் அணிவதைத் தடுக்கும் மருத்துவ நிலை உள்ள எவருக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது..