குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படும் முன்னாள் பிரதமர் …!!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் ஒன்று வழங்கவுள்ளார்.

நல்லாட்சியின்போது நடைபெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் மோசடி குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார்.

பிணைமுறி கொடுக்கல்-வாங்கல்கள் மோசடி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.