கொரோனா தொற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளை தனிமைப்படுத்த திட்டம்-சுவிஸ்லாந்து

அதிக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளை தனிமைப்படுத்த, சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பத்து நாட்களுக்கு சுவிஸ்லாந்திற்கு திரும்பும் பயணிகள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலை, பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் பராமரித்து புதுப்பிக்கும் என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் பொதுவாக எல்லை இல்லாத ஷெங்கன் மண்டலத்திற்கு வெளியே 15 நாடுகளில் இருந்து பயணத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஐரோப்பிய ஆணையத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவதாக எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் ஆணையத்தின் ஜூலை 1ஆம் திகதி முன்மொழிவுடன் ஒப்பிடும்போது ஜூலை 20 வரை நடவடிக்கைகளை நீக்காது என்றும் இந்த பட்டியலில் இருந்து செர்பியாவை விலக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் தனிநபர்களுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிவிடும் எனவும் கூறினார்.

தற்போது இந்த பட்டியலில் வரக்கூடிய ஒரு நாடு சுவீடன் என கூறப்படுகின்றது. தற்போதைய 12 மாத வரம்பை உருவாக்கி அதன் குறுகிய கால வேலை திட்டத்தை 18 மாதங்களுக்கு நீடிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அலுவலக புள்ளிவிபரங்களின்படி, சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸின் தொற்றுகள் ஜூன் நடுப்பகுதியில் இருந்து வேகமாக உயர்ந்து. நேற்று (புதன்கிழமை) இரண்டு மாத உயர்வான 137 புதிய தொற்றுகளை பதிவு செய்தது. இது மே மாத இறுதியில் சராசரியாக 10-20 தொற்றுகளில் இருந்து அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் அண்டை நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டதிலிருந்து நோய்த்தொற்றுடைய நபர்கள் நாட்டிற்குள் நுழைவதே வைரஸின் சமீபத்திய உயர்வுக்கு காரணம் என அரசாங்கம் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.