தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் போட்டி-கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டல்

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டும் வகையில், தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் தொடரொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3TC என பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் மூன்று அணிகள் பங்கேற்கின்றன. மூன்று அணிகளுக்கும் ஏபி டி வில்லியர்ஸ், குயின்டன் டி கொக், ரபாடா ஆகியோர் அணித்தலைவர்களாக தலைமை தாங்குகின்றனர்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு போட்டியும் 12 ஓவர் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு போட்டியும் 12 ஓவர்களாக கொண்டதாக இருக்கும்.

ஒரு அணியில் 8 பேர் துடுப்பெடுத்தாடலாம். 7 விக்கெட்டுகள் வீழந்தாலும் 8வது வீரர் துடுப்பெடுத்தாட அனுமதிக்கப்படுவார்.

இரண்டு, நான்கு, சிக்ஸர்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒரே நாளில் இந்த போட்டிகள் நடைபெறும். மொத்தம் 36 ஓவர்கள் ஆகும்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் 102ஆவது பிறந்த நாளான 18ஆம் திகதி, இப்போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.