பாதங்களை அழகாக்கும் பாண் ……

 
கோடை காலம் ஆரம்பித்தவுடன் மக்கள் வேறு இடங்களுக்கு ஊர்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து இருப்பார்கள். ஒரு நீண்ட நடைபயிற்சி, பூங்காவில் காலார நடத்தல் மற்றும் கடற்கரையில் விளையாடுதல் போன்றவற்றை விரும்புவோம். பொதுவாக வெளியே செல்லும் போது செருப்பு அல்லது ஷூக்களை அணிவது வழக்கம். ஆனால் உங்க கால்கள் கோடைக்கு தயாராகி விட்டதா. வெளியில் இருக்கும் வெப்பத்தை உங்க பாதங்கள் தாங்குமா? கோடை காலத்தில் பாதங்களை பராமரிக்க ஒரு எளிய டிப்ஸ் இதோ உங்களுக்காக.

​கோடைகால தயார் நிலைகள்

வெளியில் சூடாக இருக்கும் போது கோடைக்கால உடை அல்லது சில ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். அதே மாதிரி குளிர் காலங்களில் உங்க பாதங்கள் குளிரை தாங்க முடியாது என்பதால் ஷூ மற்றும் ஷாக்ஸ் போட்டு வெளியே தெரியாதவாறு முழுவதுமாக கவர் செய்து இருப்போம். இப்படி மூடியே வைக்கப்பட்ட கால் எப்படி இருக்கும். கண்டிப்பாக ஈரப்பதத்தால் பூஞ்சைத் தொற்று மற்றும் காலில் ஆணிகள் போன்றவை ஏற்பட்டு இருக்கலாம்.

எனவே இந்த பிரச்சினைகளையெல்லாம் களைந்து கோடை காலத்தில் உங்க காலை அழகுடன் மிளிர ரொட்டித் துண்டுகள் உதவுகின்றன. ஆமாங்க வெறும் ரொட்டித் துண்டுகளை வைத்தே உங்க பாதங்களை அழகாக்க முடியும். எப்படி உங்க பாதங்களை எளிதில் அழகாக்க முடியும்