மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது…!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இலங்கை குறித்த அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி ஒப்படைக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு கடந்தவருடம் வருகை தந்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது

ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.