மஹேலவிடம் இன்று சாட்சியம்..

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தற்பொழு விளையாட்டு துறை தொடர்பான தவறான விமர்சனங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இவர் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலககிண்ண தொடரின் இறுதி போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

இதன்போது ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் திட்டமிட்ட வகையில் போட்டியின் வெற்றி கைவிடப்பட்டதாகவும் அப்போது விளையாட்டு துறை அமைச்சராக கடமையாற்றிய மகிந்தானந்த அழுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் விளையாட்டு துறை தொடர்பான தவறான விமர்சனங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவு சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றது.

இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் குறித்த பிரிவில் முன்னிலையாகி 9 மணித்தியாலங்கள் சாட்சியமளித்திருந்ததோடு அப்போதைய இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வா மற்றும் முன்னாள் வீரர் உபுல் தரங்க ஆகியோரும் சாட்சியமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.