மாவட்ட செயலாளர்களின் கீழ் மீண்டும் கொண்டுவரப்படும் வனப்பகுதிகள்..!!!

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கீழுள்ள அரசுக்கு உரிமையான வனப் பகுதிகளை மீண்டும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை தகவல் அறிவித்துள்ளது.

விசேட சுற்றறிக்கையின் ஊடாக கடந்த 2001ஆம் ஆண்டு இந்நிலங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் விவசாயிகள் எதிரநோக்கி வரும் சிக்கல்களை கருத்திற்கொண்டு மீண்டும் குறித்த நிலங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.