இனி வீட்டிலேயே செய்யலாம் பிரவுனி…..

வாயில் போட்டவுடன் கரைந்து போய்விடக் கூடிய வால்நட் கொண்ட சாக்லெட் பிரௌனி. ஒவ்வொரு துண்டிலும் அற்புதமான சுவை! சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கப் காஃபியுடன் சாப்பிடுவதற்கு கச்சிதமானது. ஏன் நள்ளிரவிலும்கூட சாப்பிடலாம்.
செய்முறை நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்

அளவு: மொத்தம் 10 துண்டுகள் செய்யலாம்
— 70 கி. வெண்ணெய்
— 70 கி. சர்க்கரை
— 140 மி.லி. கண்டென்ஸ்டு பால்
— 65 மி.லி. தண்ணீர்
— 140 கி. மாவு
— 1லு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
— 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
— 200 கி. நறுக்கிய வால்நட்
— 125 கி. சாக்லெட்

1 வெண்ணெய், சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பால், தண்ணீர் இவற்றை கலக்கவும், பின்னர் இதை மெதுவாக வெண்ணெய் கலவையுடன் சேர்க்கவும்.
2 மாவு, பேக்கிக் பவுடர், பேக்கிக் சோடாவை கலக்கவும், அதனுடன் வால்நட்டை சேர்க்கவும்.
3 சாக்லேட்டை டபுள் பாய்லரில் வைத்து நன்றாக உருகும் வரை காத்திருக்கவும். அதை பால் கலவையுடன் கலக்கவும். பின்னர் மென்மையாக மாவுடன் சேர்த்து கலக்கவும்.
4 பட்டர் பேப்பர் வைக்கப்பட்ட ஒரு ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி, 180மு சென்டிகிரேடில் 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
5 குளிர்வித்து, சதுரம் சதுரமாக வெட்டவும்.
6 சூடான காஃபியுடன் பரிமாறவும்.