இலகுவாக வீட்டு தோட்டம் செய்யலாம்..

ஜீரோ பட்ஜெட் தோட்டம்
– உங்கள் மாடித் தோட்டத்திற்கு உரமும் வேண்டும். சுற்றுச் சூழலுக்கு உதவியும் செய்ய வேண்டும். ஒரே கல்லில் இந்த இரண்டு மாங்காயையும் அடிக்க முடியும் தெரியுமா. உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளையே மாடித் தோட்ட செடிகளுக்கு உரமாக மாற்ற முடியும்.
– முதலில் தயார் செய்ய வேண்டியது சமையலறையில் இரண்டு குப்பைத் தொட்டி. ஒன்று மக்காத குப்பை. வேறு வழியே இல்லை, அதைக் குப்பைத் தொட்டியில் கொட்டியாக வேண்டும். இரண்டாவது, மக்கும் குப்பை. அவற்றை சேகரித்து, மக்கிப் போகும் வரை பல்வேறு தொட்டிகளில் சேமித்து வைத்து உரமாகப் பயன்படுத்தலாம். மீன் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் வெல்லம் சேர்த்து வைக்கும் போது நாற்றமே இல்லாத தேன் போன்ற உரமாக மாறிவிடும். மண்ணுக்கு ஆக்ஸிஜனும் ஈரப் பதமும் இருக்கும்போதுதான் கம்போஸ்டிங் நடக்கும் என்பதால் அதை மட்டும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
– இத்தகைய கம்போஸ்டிங் முறைகளைத் தெரிந்துகொள்வது மூலம் ஒரு பைசா செலவில்லாமல் வீட்டுத் தோட்டத்திற்கு உரம் சேர்க்கலாம்.

எங்கு விதைகள் கிடைக்கும்…
– மாடித் தோட்டம் உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை வெறும் `300க்கு வழங்குகிறது தமிழக தோட்டக்கலை துறை. வெளியே சந்தையில் வாங்கினால் இதற்கு நீங்கள் `500க்கு மேல் தர வேண்டியிருக்கும். குறைந்த அளவு இடத்திலும், ஏன் மாடியிலும்கூட தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கிறது மாநில அரசு. விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய காய்கறி கிட் இதில் கிடைக்கும். மாடித் தோட்ட இயக்கம் என்ற பெயரில் இது தமிழகம் முழுவதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
– வெய்யிலின் கொடுமையிலிருந்து செடிகளைக் காக்க உதவும் வலை இவர்களிடம் `3,550க்கு கிடைக்கிறது. இது வெளிச் சந்தையில் கிடைப்பதைவிட மலிவானது. அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகம் மூலம் இதைப் பெறலாம். மரக் கன்றுகளையும்கூட அவர்கள் மூலமாகவோ விதை வானவன் போன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாகவோ பெறலாம்.

நீங்களே தயாரிக்கலாம் மாடித் தோட்ட உரம்
-“தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் நாமே தயாரித்து கொள்ளலாம். அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் ,மீன்அமிலம்,கனஜீவாமிர்தம், பஞ்சகவ்யா முதலியவற்றை நாமே வீட்டில் தயார் சென்து கொள்ளலாம்.இவை செடிகளுக்கு மண்ணில் உரமாகவும் ,நீரில் கலந்து செடிகள் மேல் தெளிக்கலாம்.
– மண்கலவை செம்மண் சாண எரு, மண்புழு உரம் ,தேங்காய் நார் ,வேப்பம்புண்ணக்கு, கடலைபுண்ணாக்கு முதலியவற்றை கலந்து தோட்டம் அமைக்கலாம்“ என்கிறார் மாடித் தோட்டம் அமைத்திருக்கும்