பாதாளகுழுத் தலைவருக்கு விஷம் வைத்து கொலை!

பாதாளக் குழுத் தலைவர் சந்தன லசந்த பெரேரா எனும் அங்கொடை லொக்கா இந்தியாலில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என்று சிங்கள ஊடகங்கள் இன்று (23) செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் லொக்காவுடன் வசித்து வரும் முல்லேரிய ரஹ்மான் என்பவரின் மனைவி உணவில் விஷம் கலந்து லொக்காவை கொன்றதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அங்கொட லொக்காவுக்கு பல்வேறு போதைப் பொருள் கடத்தல்கள், கொலைகள் மற்றும் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களில் தொடர்புள்ளமை குறிப்பிடத்தக்கது.