வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 22 பேருக்கு கொரோனா!!!

இலங்கையில் நேற்று (22) 22 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 677 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 2,064 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.