இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம் …!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு மென்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.
குறித்த அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்றதுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
இந்தநிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.