ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு அனுமதி!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம் என நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் இதுகுறித்து கூறுகையில் ”ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்.

தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனினும், சில விடயங்களில் அந்தந்த வீரர்கள்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள கடும் முயற்சி எடுக்க வேண்டியது கடமை. சில தகவல்களை அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து எங்களால் உதவி செய்ய முடியும்” என கூறினார்.

நியூஸிலாந்தை சேர்ந்த ஜிம்மி நீஷம் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), லொக்கி பெர்குசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மிட்செல் மெக்கிளேனகன் மற்றும் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்), கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), மிட்செல் சான்ட்னெர் (சென்னை சுப்பர் கிங்ஸ்) ஆகியோர் முக்கிய வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.