இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நிறைவு!

இங்கிலாந்தில் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெற்ற இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டுள்ளது.

லிவர்பூல் அணி 38 போட்டிகளில் விளையாடி 32 வெற்றிகள், 3 சமநிலை, 3 தோல்வி என 99 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

மன்செஸ்டர் சிட்டி அணி 38 போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகள், 3 சமநிலை, 9 தோல்விகள் என 81 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.

மன்செஸ்டர் யுனைடெட் அணி, 38 போட்டிகளில் விளையாடி 18 வெற்றிகள், 12 சமநிலை, 8 தோல்விகள் என 66 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.