மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுடமான டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடி வரும் நிலையில் நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டம் மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது மேற்கிந்திய தீவுகள் அணி தமது இரண்டாவது இன்னிஸில் 2 விக்கட்டுக்களை இழந்து 10 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.