ஶ்ரீலங்கா பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பு…!

ஶ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை ஓகஸ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள குறித்த தொடர் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 23 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.