பெண்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிஸ்கட்டுகள் ரகசியம் …….

நம்முடைய பிஸ்கெட் ஞாபகங்கள் மறக்கமுடியாதவை! சுவையான இந்த ஸ்நாக்கை வைத்து உங்கள் குணத்தைக் கண்டறிகிறார் ஃபரா பாலியா

டபுள் சாக்லெட் பிஸ்கெட்
நீங்கள்: உற்சாக மும், மகிழ்ச்சியும் நிரம்பிய பெண். இந்த பிஸ்கெட்டை விரும்பும் பெண்கள், பிஸியாகவே இருப்பார்கள். நீங்கள் கலோரிகளை பற்றி கவலைப்படுபவர் அல்ல. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழ விரும்புவீர்கள். வாழ்க்கையின் எல்லா நல்ல விஷயங்களை யும் தீவிரமாக விரும்புவரா நீங்கள், அப்படியென்றால் டபுள் சாக்லெட் சிப் பிஸ்கெட் உங்களுக்காகத்தான்!
உங்கள் பிஸ்கெட்: டார்க், மில்க் சாக்லெட்டின் லேயர்கள் நிறைந்த இந்த பிஸ்கெட், உண்மையில் சாக்லெட் சுவையின் சொர்க்கத்தில் உங் களைக் கொண்டு போய் சேர்க்கும். கோகோ ஏராளமான உடல்நல பலன்களைத் தரும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்த பிஸ் கெட்டுகளை, பாலு டன் சேர்த்தும்கூட நீங் கள் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு கூடு தலாக கால்சியம் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
உட்பொருள்கள்: டார்க் சாக்லெட், மில்க் சாக்லெட், மாவு, சர்க்கரை, வெண்ணெய் மற்றும் முட்டைகள்.

ஓட்ஸ், உலர் திராட்சை பிஸ்கெட்
நீங்கள்: டிராவல் செய்ய விரும்பும் பெண். டிரெக்கிங் செல்வதோ, வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து புத்தகம் படிப்பதோ உங்களுக்கு பிடிக்கும். பார்ப்பதற¢கு சாதாரணமாகத் தெரிந்தாலும், நீங்கள் எளிமையாகவும், இரக்கம் நிறைந்தவராகவும் அல்லது வேடிக் கையாகவும், ஸ்வீட்டான நபராக வும் இருக்க வாய்ப்பு உண்டு.
உங்கள் பிஸ்கெட்: மென்று தின்பதற்கு ஏற்ற இனிப்பான உலர் திராட்சைகளும், மொறுமொறுப்பான ஓட்ஸும் இந்த பிஸ்கெட்டை ஆரோக்கியமானதாக மாற்றுகின்றன. கோதுமைத் தவிடு, ஆளிவிதை போன்றவற்றை சேர்த்து சாப்பிடும்போது, இதில் ஃபைபர் சத்தும் அதிகரிக்கிறது.
உட்பொருள்கள்: நசுக்கிய ஓட்ஸ், உலர் திராட்சை, லவங்கப்பட்டை, புதிதாகத் துருவிய ஜாதிக்காய்.

கிறிஸ்துமஸ் பிஸ்கெட்
நீங்கள்: கவனிப்பு திலகம். பாரம்பரியத்தை விரும்புபவர், உணவின் ரசிகை, மற்றவர்களுடன் சேர்ந்திருப்பீர்கள். இதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும், விருந்தோம்பல் குணமும், மற்றவர்களது கவனத்தை உங்கள் மேல் திருப்பும். நண்பர்களையும், குடும்பத்தினரையும் உங்கள் வீட்டுக்கும், சமையலறைக்கும் வரவேற்பதில் மகிழ்வீர்கள்.
உங்கள் பிஸ்கெட்: இந்த பிஸ்கெட்டில் வெண்ணெயும் சர்க்கரையும் நிறைந்துள்ளன. -சூடான, டார்க், ஹாட் சாக்லெட்டில் முக்கி சாப்பிட ஏற்றது. ஆனால் அதிகமாக சாப்பிடாதீர்கள், தினசரி ஸ்நாக்காக இதைச் சாப்பிடுவது நல்லதல்ல.