ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதல்!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இப்போட்டி சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு நடைபெறும் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவென்பதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அத்துடன் 13ஆவது 50 ஓவர்கள் கொண்ட உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின், தகுதிக்கான ஒருநாள் சுப்பர் லீக் போட்டித் தொடரின் முதல் போட்டியாகவும் இப்போட்டி அமையவுள்ளது.

இதில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அயர்லாந்து அணிக்கு ஹென்ரிவ் பால்பிரையனும் தலைமை தாங்கவுள்ளனர்.