கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிய மதுமிதா…!!!

பிரபல நடிகை மதுமிதா கொரோனா ஊரடங்கில் விடுமுறையில் படப்பிடிப்பு இல்லாத்தால் இரண்டு விஷயங்களை முக்கியமாக கற்றுக் கொண்டுள்ளார்.

ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது .