சிட்னி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு குயின்ஸ்லாந்து எல்லை மூடப்படுகிறது…!!!

வடக்கு அவுஸ்ரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னஸ்டாசியா பலாஸ்ஸுக் (Annastacia Palaszczuk), சிட்னி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சனிக்கிழமை அதிகாலை முதல் இந்த மாநிலம் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

கிரேட்டர் சிட்னியை சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் குயின்ஸ்லாந்து அரசு ஒரு தொற்று பரவல் மையமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னஸ்டாசியா பலாஸ்ஸுக் கூறுகையில், ‘வீடு திரும்ப விரும்பும் குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்;களுக்கு அறிவிப்பு கொடுப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் இதைச் செய்துள்ளோம். நாங்கள் தற்போது அசாதாரண காலங்களில் இருக்கிறோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்;கள் சிட்னிக்கு பயணம் செய்யக்கூடாது. புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது திரும்பி வரும் குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் 14 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் செலவிட வேண்டும்’ என கூறினார்.

விக்டோரியாவில் புதன்கிழமை 295 தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மொத்த எண்ணிக்கையை 176ஆகக் கொண்டுவந்துள்ளது.

0Shares