சுவையான தக்காளி சூப் ….

தேவையான பொருட்கள் :

தக்காளி –  கால் கிலோ,

பெரிய வெங்காயம் – 2,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு, மிளகுத்தூள், பால், கொத்தமல்லி தழை – தேவையான அளவு

செய்முறை:

ஒரு வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, மற்றொரு வெங்காயத்தை பெரிதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி – வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.

சூப்பரான தக்காளி சூப் ரெடி.