தனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன்

இந்நிலையில் மாளவிகா மோகனன் ட்வீட் பதிவிட்ட சில நாட்களே ஆகும் நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படமான D43 படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார் என செய்தி பரவி வருகிறது. இந்த படத்தினை கார்த்திக் நரேன் தான் இயக்கவுள்ளார்.

மாளவிகா மோகனன் பதிவிட்டு இருந்த ட்வீட்டுக்கு தனுஷ் பதிலளித்திருந்தார். அதில் நானும் உங்களுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அவர்கள் ஜோடியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை மாளவிகா தனுஷ் உடன் நடிப்பது உண்மை என்றால் மாளவிகா மோகனன் பிறந்த நாளான ஆகஸ்டு 4 ஆம் தேதி அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாளவிகா மோகனன் இதுவரை 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய ரோலில் அவர் நடித்திருந்தார். அதில் தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டுவதற்கு பெரிய அளவிலான நேரம் அவருக்கு இருக்கவில்லை. அதனை தொடர்ந்து தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது தோற்றத்தை ஒரு போஸ்டரில் மட்டுமே காட்டி இருந்தனர். அவரது ரோல் தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளிவராமல் இருக்கிறது. விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என கூறப்படுவதால் மாளவிகா மோகனன் ரோலும் அதுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாளவிகா மோகனன் அடுத்து பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கல்லி பாய் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த சித்தாந்த் சதுர்வேதி ஜோடியாகத் தான் மாளவிகா மோகணன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக மாளவிகா மோகணனுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது என கூறப்பட்டு வருகிறது. இது நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் வாங்குகிறார், அவரை விட மாளவிகா அதிகம் சம்பளம் வாங்குவது பலரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து தனுஷ் உடன் மாளவிகா ஜோடி சேர்வதாக கூறப்படும் D43 படத்தினை துருவங்கள் 16, மாஃபியா பட புகழ் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த லாக் டவுன் நேரத்தில் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகளில் இயக்குனர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.