நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கண்டிப்பாக காதல் திருமணமே செய்வேன் எனக் கூறியுள்ளார்…!!!

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத் கண்டிப்பாக காதல் திருமணமே செய்வேன் எனக் கூறியுள்ளார்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் அண்மையில் அளித்துள்ள பேட்டியொன்றிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எனக்கு நயன்தாரா, சமந்தாவை மிகவும் பிடிக்கும். சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்தது. இதில் அவர்கள் தாக்குப்பிடித்து சாதித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் நிச்சயம் செய்யும் திருமணங்கள் தோல்வி அடைகிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு வரப்போகிற கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும். நானும் அவரை புரிந்து கொள்ள வேண்டும். எனவே கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.