மால்டாவில் மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு கொவிட்-19 தொற்று உறுதி…!!!

மால்டா கடலோர காவல்படையினரால் மத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட 94 புலம்பெயர்ந்தோர் குழுவில் மூன்றில் இரண்டு பங்கினர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

குறித்த புலம்பெயர்ந்தோருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 65 பேருக்கு கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.

இருபது பேருக்கு சோதனை எதிர்மறையாக வந்துள்ளது. மேலும், ஒன்பது பேருக்கு முடிவுகள் வரவில்லை.

புலம்பெயர்ந்தோர் எரிட்ரியா, மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்தோரின் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து 30 மணி நேரம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.