ஹொங்கொங்கின் மருத்துவமனை அமைப்பு சரிவை எதிர்கொள்ளக்கூடும்: நகரத் தலைவர் எச்சரிக்கை..!!!


கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கடுமையாக அதிகரித்து வருவதால், ஹொங்கொங்கின் மருத்துவமனை அமைப்பு சரிவை எதிர்கொள்ளக்கூடும் என்று நகரத் தலைவர் கேரி லாம் எச்சரித்துள்ளார்.

நகரம் ஒரு பெரிய அளவிலான சமூக தொற்று பரவலின் விளிம்பில் உள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் மக்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கட்டாய முகக்கவசகள் மற்றும் உட்புற உணவகங்களை மூடுவது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இன்று (புதன்கிழமை) நடைமுறைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆரம்பகால வெற்றியைப் பெற்ற ஹொங்கொங், தற்போது 100க்கும் மேற்பட்ட புதிய தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையை பதிவுசெய்து வருகின்றது. ஒரு மாதத்திற்கு முன்னர், புதிய தினசரி தொற்றுகளின் சராசரி எண்ணிக்கை 10க்கு கீழ் இருந்தது.

ஹொங்கொங்கில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 2,885பேர் பாதிக்கப்பட்டதோடு, 24பேர் உயிரிழந்துள்ளனர்.