இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு …!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 54 ஆயிரத்து 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 783 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 39 ஆயிரத்து 350 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 10 இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 5 இலட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கடந்த காலத்தை விட பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பாதிப்பை விட குறைவாகும்.

அத்துடன் புதிதாக 97 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.