குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

ஈ.ரி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க மற்றும் அசங்க ஏதிரிசிங்க ஆகியோரை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த நான்கு பேரும் நேற்றைய தினமும் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகினர். இதன்போது, சுமார் 8 மணித்தியாலத்திற்கு மேலாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர்.

ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈ.ரி.ஐ நிறுவனத்தில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்று வருவதாக அது குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.