மற்றொரு இளம் நடிகர் தற்கொலை அதிர்ச்சியில் திரை உலகம் …!!!

பாலிவுட் நடிகர் சுஷாந்தை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு இறந்தபின் நட்சத்திரங்களின் மன அழுத்தம் குறித்த விவதாங்களும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வும் அதிகம் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. ஆனாலும் அதை தொடர்ந்து கன்னட இளம் நடிகரான சுஷீல் கவுடா என்பவரும் மன அழுத்தம் காரணமாக ஜூலை-8 தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் மராத்திய நடிகர் அஷுதோஷ் பக்ரே என்பவரும் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு மீண்டும் பரபரப்பை திரை உலகில் ஏற்படுத்தி உள்ளது.

அவருடைய பெற்றோர் கொடுத்த தகவலின் பேரின் பாக்ரேவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.