6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி…!!!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் கேர்டிஸ் கெம்பர் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி 5 விக்கட்டுக்களை முழுமையாக கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 27.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக சம் பில்லியங்ஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.