அரசியலமைப்பில் தனிப்பட்ட தேவைக்காக திருத்தங்களை செயற்படுத்த கூடாது–ஐக்கிய மக்கள் சக்தி..!!

58

தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடு 2015 க்கு முந்தைய காலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குடிமக்களின் உரிமைகளை வலுப்படுத்தவே அரசியலமைப்பு திருத்தம் தேவை என்றும் ஒரு நபரின் நலனுக்காக மாற்றங்கள் செய்யப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

20 வது திருத்தம் புதிய நபர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் தந்திரமாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது, நாட்டை 2015 க்கு முன்னர் இருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவதற்காக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் ஒழிப்பது என்பது ஒரு குடும்பத்தைச் சுற்றி அதிகாரத்தை பகிந்துகொள்வதற்கான நோக்கம் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.