ஒடிசாவில் ஆயுதங்கள் மீட்பு:பொலிஸார் விசாரணை…!!!

48

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளின் இருப்பிடங்களில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மல்கான்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைத் தயார் செய்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய, அப்பகுதிகளிலுள்ள வனப்பகுதி முழுவதும் திடீர் சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டனர்.

இதன்போது, மாவோயிஸ்ட்டுகளின் மறைவிடங்களில் இருந்த வெடிமருந்து குழாய்கள், 93 டெட்டனேட்டர்கள், கேஸ் சிலிண்டர்கள், லேத் இயந்திரங்கள், வெல்டிங் இயந்திரங்கள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.