சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து பிரபல நடிகை எடுத்த முடிவு….!!!

48

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது சினிமா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் நிலவும் நெப்போட்டிஷம்தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் தகவல் கூறப்பட்டது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்தில், நீதி கிடைக்க வேண்டும் என தொடக்கத்தில் இருந்து பேசி வரும் நடிகை கங்கனா ரனாவத் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுவரையும் ட்விட்டர் வலைதள பக்கத்தில் நேரடியாக இல்லாமல் இருந்த கங்கனா, தற்போது அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து கலந்துரையாடிய அவர், ”நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை ஏன் சோஷியல் மீடியாவில் நான் இணையவில்லை என பலர் கேட்டுள்ளனர். எனக்கு அதில் பெரிதான விருப்பம் இருக்கவில்லை. ஆனால், அண்மையில் சுஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்பதில், சோஷியல் மீடியாவின் சக்தியை புரிந்து கொள்ள முடிந்தது. அதன் காரணமாகதான் இந்த முடிவு” என தெரிவித்துள்ளார். இதையடுத்து கங்கனாவின் ரசிகர்கள், #BollywoodQueenOnTwitter என நடிகையின் ட்விட்டர் வரவை ட்ரெண்டாக்கி வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது .