கடலில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்களை காணவில்லை.!

74

கல்கிஸ்ஸை கடலில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்கிஸ்ஸை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா – பூண்டுலோயா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரண்டு இருவரே காணாமல் போயிருந்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

7 பேர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில் 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குழுவொன்றே இவ்வாறு நீராடச் சென்றிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.