கொவிட்-19: வடக்கு இங்கிலாந்தின் மூன்று பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது…!!!

39

வடக்கு இங்கிலாந்தின் மூன்று பகுதிகளில் அரை மில்லியன் மக்கள், கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஓல்ட்ஹாம், பிளாக்பர்ன் மற்றும் பெண்டில் ஆகிய பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் சனிக்கிழமை நள்ளிரவு முதல், தங்கள் வீட்டுக்கு வெளியில் உள்ளோருடன் யாருடனும் பழக அனுமதிக்கப்படுவதில்லை.

அத்தியாவசிய பயணங்களுக்கு அப்பால் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணங்கள்,இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 20க்கும் மேற்பட்ட நபர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்த பின்னர் அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.