நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை பதிவு செய்யப்பட்டது..!!

71

இந்த வருடத்தின் இறுதி 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 950 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டு நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மதிப்பீட்டை நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் மாதங்களுக்கான அரச செலவீனத்தை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 949.736 ருபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.