நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளி கண்டு பிடிப்பு…!!!

60

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்டு பிடித்த பொலிஸ்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் குடியிருப்புக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த விவகாரத்திலேயே பொலிசார் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

ரயில்வே அதிகாரியின் மகளும் தேசிய அளவில் பிரபலமான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தாயாரையும் சகோதரரையும் சுட்டுக் கொன்றதாக பொலிசார்கண்டுபிடித்துள்ளனர்.

தனிப்பட்ட விசாரணையில் சிறுமி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், முழு காரணங்களையும் பொலிசாரிடம் வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் நேற்று துப்பாக்கியல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

14 வயதேயான மகள் காயங்களுடன் தப்பியிருந்தார். பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இவ்வாறான ஒரு தாக்குதல் சம்பவம் காவல்துறை அதிகாரிகளையும் மாநில அரசாங்கத்தையும் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.

தொடர்ந்து தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியால் தனது உருவம் தெரிந்த கண்ணாடி மீது சுட்டுள்ளார்.பின்னர் தாயாரையும் சகோதரரையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தமக்கு தாமே காயங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.