நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கூட்டம்…!!!

59

மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களுடன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் கலந்துகொள்ளவுள்ளார் என்று தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது

ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகின்றன.

இதன்போது மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடப்படுகின்றது.