பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்கள் பயன்படுத்த தடை..!

72

பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதற்கு தடைவிதிப்பதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றாடல் நலன் கருதியும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தற்போது அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு மாற்றீடாக தேசிய உற்பத்தி பொருட்களை உபயோகிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.