போதை பொருள் வர்த்தகத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்..!!

69

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டிய 2 ஆயிரத்து 643 மில்லியன் ரூபாய் பணத்தை பறிமாற்றிய 102 வங்கி கணக்குகள் காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த கணக்குகளில் தற்போது 96.7 மில்லியன் ரூபாய் பணமே எஞ்சியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வங்கி கணக்குகளில் 90 சதவீதமானவை தனியார் வங்கிகளில் பேணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெரும்பாலான போதைப்பொருள் வர்த்தகர்கள் தம்முடன் நெருங்கிய தொடர்பிணை பேணியுள்ளவர்களின் பெயர்களில் வங்கி கணக்குகளை பேணியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வங்கி கணக்கும் போகுந்தர பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பேணப்பட்டுள்ளமையும் பின்னர் தெரியவந்தது.

அத்துடன் தற்போது சிறையில் உள்ள போதைப்பொருள் வர்த்தகரான மர்வின் ஜானாடா என்ற ஜனித் ஹசான் விமலவீரவிற்கு சொந்தமாக ஆயிரத்து 400 லட்சம் ரூபாய் வைப்பலிடப்பட்ட வங்கி கணக்கும் காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.