மாத்தளை மேயர் பதவியில் நீடிக்க தற்காலிக தடை!

56

மத்திய மாகாண ஆளுநரினால் மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித் அலுவிகார நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை மேயரின் செயற்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்த விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.