மாலை நேர சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு சாட்..!!

64

தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மல்லித்தூள் – அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை உப்பு – தேவையான அளவு

செய்முறை:

*உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*வெங்காயம், இஞ்சி, தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக

*பிறகு, தக்காளி சேர்த்து வேக விடவும்.

*கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.

*பின்னர், சாட் மசாலா, தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும்.

*இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*பரிமாறும்போது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிஸ்க்சர் , கொத்தமல்லித்தழை, சாட் மசாலா தூவி, தக்காளி சோஸ் சேர்த்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..

அசத்தலான சுவையில் ஆலு சாட் ரெடி..!!