மீன்பிடி விவகாரத்தை தீர்க்க நடவடிக்கை- டக்ளஸ்

67

வடமாராட்சி, வல்வெட்டித்துறை பிரதேச கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தத் தகுந்த சேற்றுப் படுகைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குறித்த ஆய்வு நடவடிக்கைகளை இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து றோலர் எனப்படும் இழுவைப் படகுகளை பயன்படுத்தக்கூடிய கடற் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் இதுவரை வல்வெட்டித் துறை கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவிய இழுவைப் படகு தொழில் தொடர்பான முரண்பாடுகள் முற்றுப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்று நாரா தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து இழுவைப் படகுகள் பயன்படுத்தக் கூடிய பிரதேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.