விக்கெட்டுகளை வீழ்த்தி அன்டர்சன் புதிய சாதனை..!!

62

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று(செவ்வாய்கிழமை) சௌதம்டனில்
இடம்பெற்றது.

இந்த இறுதி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர் அசார் அலியை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் அன்டர்சன் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..