சர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை நீட்டிப்பு…!!!

கொரோனா நெருக்கடி காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை வரும் ஓகஸ்ற் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 23ஆம் திகதி முதல் சர்வதேச விமானக் போக்குவரத்து சேவை மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதையடுத்து, கடந்த மே 25ஆம் திகதி பல்வேறு சுகாதார நடைமுறைகளுடன் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்று உலக நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமான சேவைகள் தொடர்ந்து இடம்பெறும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.