துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அறிக்கை…!!!

விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரு படங்களும் நடிகர்களின் திகதி ஒதுக்கீட்டை வைத்தே உருவாகி வருகிறது. இதுவரை 70 நாட்கள் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பும், 45 நாட்கள் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும், இந்த இரு பெரிய படங்களுமே இந்த ஆண்டுக்குள் வெளியாகும். இதில் துருவ நட்சத்திரம் படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன, எனவே படத்தை குறுகிய இடைவெளியில் முடிக்க முடியவில்லை. இந்த இரு படங்களுமே இருவேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இருபடங்களிலுமே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான அளவிலேயே படத்திற்கு திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.

கௌதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அறிக்கை