வியட்நாமில் முதலாவது கொவிட்-19 தொற்று…!!!


வியட்நாமில் முதலாவது கொரோனா வைரஸ் (கொவிட்-19) உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமும் கொவிட்-19 உயிரிழப்பு இல்லாத நாடு என பெருமிதம் கொண்ட வியாட்நாமிற்கு இது பேரழிவு தரும் அடியாக பார்க்கப்படுகின்றது.

மத்திய நகரமான ஹோய் ஆன் நகரைச் சேர்ந்த 70 வயதான ஒருவரே இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் வியட்நாம் அரசு புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் தனாங் நகரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சுற்றுலா பயணிகள் 80 ஆயிரம் பேரை வெளியேற்றியது.

சுமார் 95 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இதுவரை, 509பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 373பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.