அனுபவமில்லாத இங்கிலாந்து அணி: பாகிஸ்தான் அணிக்கெதிராக!

36

பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்புமிக்க இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

14பேர் கொண்ட இந்த அணியில், டெஸ்ட் தொடரில் விளையாடிய ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சேம் கர்ரான், மார்க் வூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு ரி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சொந்த காரணங்களுக்காக நியூஸிலாந்து சென்றுள்ள சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இத்தொடரில் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், தொடரின் நாயகன் விருதை வென்ற டேவிட் வில்லிக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

லியாம் லிவிங்ஸ்டன், ஜேம்ஸ் வின்ஸ், லியாம் டாசனுக்கு பதிலாக ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்தான் மற்றும் டேவிட் மாலன் ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

ஓய்ன் மோர்கன் தலைமையிலான அணியில், மொயீன் அலி, ஜோனி பெர்ஸ்டோவ், டொம் பான்டன், சேம் பில்லிங்ஸ், டொம் கர்ரான், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்தான், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜேசன் ரோய், டேவிட் வில்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 28ஆம் திகதி மன்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ரி-20 போட்டிகள், முறையே 30ஆம் மற்றும் செப்டம்பர் 1ஆம் திகதிகளில் மன்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.