இராவண எல்லை பகுதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு.

32

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர்கள் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.